ஒழுக்காற்று காரணிகளை கருத்திற் கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
விமர்சித்துள்ள ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் குறித்து எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் எடுக்கப்படும்.
அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களில் குறைப்பாடுகள் காணப்படலாம். குறைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்ட முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பொது இடங்களில் கருத்துரைக்கும் போது தவறான நிலைப்பாடுகள் தோற்றம் பெறும்.
அமைச்சரவை உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment