Top News

கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்வு கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் !!


 


(நூருள் ஹுதா உமர், சர்ஜூன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ்)


"ஐக்கியமாக, ஒரே மனதுடன், வலுவாக எனும் தொனிப்பொருளில் பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதை


யாக கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் தேசிய நிகழ்வின் ஒரு அங்கமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசலையின் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான் தலைமையில் வைத்தியசாலையில் இன்று காலை நடைபெற்றது. 


கொரோணா தொற்றில் மரணித்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அறிமுக உரையை வெளிநோயாளர்  பொறுப்பு வைத்திய அதிகாரி சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். ஹரிஸ் நிகழ்த்தியதுடன் தொற்றுத்தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், பொது சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டாக்டர் ஏ.எல். பாரூக் கொரோணா கட்டுப்பாட்டு முகாமைத்துவ திட்ட அறிக்கை விளக்கத்தை நிகழ்த்தினார். 


இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் பிரிவுகளுக்கான பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்திய சாலை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்த சுகாதார துறையினர் இந்நிகழ்வின் போது பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post