சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக எடுத்துள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென இலங்கைக் கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷவிடம், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
இளம் விளையாட்டு வீரர் என்றவகையில் நாட்டுக்காக விளையாடுவதற்கு இன்னும் காலங்கள் இருப்பதாகவும் இதனால், அவசரமான தீர்மானங்களை எடுப்பதைக்காட்டிலும் சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்வதே முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் வீரர்கள் தனிப்பட்டக் காரணங்களுக்காக அணியிலிருந்து விலகுவதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. அவ்வாறான நிலையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அந்தவீரரின் தீர்மானமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் வீரர்களின் சிலரது ஒழுக்கமற்ற செயற்பாடுகளால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இத்தீர்மானத்தை மதித்து அவர்கள் செயற்பட்டதால் அவர்கள் மீண்டும் அணியில் இணைத்துகொள்ளப்பட்டனர். எவ்வாறாயினும் நாட்டுக்கு மீண்டும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்க தான் தயங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
Post a Comment