ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவுகளுக்கு தடை ; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு.

ADMIN
0

 

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


இவ்வாறு செய்பவர்களு்ககு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஊடக சந்திப்பொன்றில் வைத்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.


ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் குழுவொன்று வழங்கிய கருத்துப் பரிமாற்றம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் பெண்ணொருவரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top