Top News

ஜனாதிபதி கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் குறித்து அறிவிப்பு வெளியானது

 

நாடாளுமன்ற அமர்வு மீள ஆரம்பிக்கப்படும்போது ஜனாதிபதி நிகழ்த்தவுள்ள கொள்கைப் பிரகடன உரை தொடர்பான  ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்தே குறித்த தீர்மானம் எட்டப்பட்டது.


ஜனாதிபதியால் தற்போது நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.


இதன்போது ஜனாதிபதி தமது கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.


அதற்கமைய, ஜனாதிபதி உரை தொடர்பாக எதிர்வரும் 19ஆம், 20ஆம் திகதிகளில் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post