Top News

வவுனியா பரசங்குளத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு!





வவுனியா பரசங்குளம் காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் நேற்று மீட்கப்பட்டன.

இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புளியங்குளம் காவல்துறையினருடன் இணைந்து பரசங்குளம் காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த குண்டுகள் மீட்கப்பட்டன.

இதன்போது ஆர்பிஜி ரக குண்டு 01, 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு 03ம் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்..

Post a Comment

Previous Post Next Post