லாஃப் காஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடுகள் எதிர்வரும் மூன்று வாரங்களில் நீங்குமென அந்நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாளாந்தம் 40,000 - 50,000 வரையிலான சிலிண்டர்கள் சந்தைக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன. எனினும், சிலிண்டர்களை விநியோகிக்கும்போது பின்பற்ற வேண்டிய சில பரிந்துரைகளை நீதிமன்றமும், அரசாங்கமும் வழங்கியுள்ளது. இதனால் எரிவாயுகளை நிரப்பி சந்தைகளுக்கு விநியோகிப்பது குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் நாளாந்தம் 10,000 - 15,000 வரையில் சிலிண்டர்கள் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. எதிர்வரும் மூன்றுவாரங்களுக்குள் காஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடுகள் நீங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சிலிண்டர்களை எடுப்பதற்கு கடன்கூற்று கடிதங்களை வங்கிகள் வழங்க வேண்டும். நாட்டில் டொலர் தட்டுப்பாடு பிரச்சினை இருப்பதால் இதில் சிக்கில்கள் ஏற்பட்டுள்ளன. எமக்கு டொலர்களை பெற்றுகொடுத்தால் 24 மணித்தியாலங்களுக்குள் சிலிண்டர்களை விநியோகிக்கு முடியும் எனவும் அவர் கூறினார்.
Post a Comment