தலைவர் பதவியை மறுத்த லசந்த விக்ரமசிங்க!
January 23, 2022
0
வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லசந்த விக்ரமசிங்க, அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லசந்த விக்ரமசிங்க கடிதம் மூலம் இதனை நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் புதிய தலைவராக லசந்த விக்கிரமசிங்க கடந்த 21ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
இவர் முன்பு மில்கோவின் தலைவராகப் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share to other apps