அந்நியச் செலாவணி நெருக்கடி, அரச நிதி நெருக்கடி மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்புகள் பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து ஆற்றிய உரையில் தெளிவாக சுட்டிக்காட்டியிருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி 9 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து நிகழ்த்திய உரை மீதான ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.
விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் 2014 ஆம் ஆண்டளவில் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இருந்ததாக சுட்டிக்காட்டினார்.
எனினும் 2015, 2016, 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கம் வாசனைத் திரவியம், மரக்கறி மற்றும் பழ வகை இறக்குமதிக்காக 5 பில்லியன் டொலர் நிதியை விரயம் செய்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எமது நாடு சுதந்திரமடைந்த நாளிலிருந்து வர்த்தகத்துறையில் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த அமைச்சர் அந்நியச் செலாவணி தொடர்பான நெருக்கடி தற்போது ஏற்பட்ட ஒன்றல்ல என்றும் தெரிவித்தார்.
Post a Comment