Top News

நாட்டில் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகாிப்பு!




நாட்டில் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளை உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.

கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறாமை என்பன எலி காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என காலி மாவட்ட சமூக நல வைத்திய நிபுணர் அமில ஏரங்க சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது, வயல் பகுதியிகளை அண்டி வசிப்பவர்கள் மாத்திரமன்றி நகர் பகுதிகளில் வசிப்பவர்களும் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post