ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தங்களிடம் தெரிவித்ததாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோருடன் நான் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்றேன். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் எம்மிடம் கோரியிருந்தார்.
ஜனாதிபதி பதவியை வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கட்சியின் ஆலோசகர் பதவிகளுக்கு தெரிவாகுவர். அவர்களின் வழிகாட்டல் எப்போதும் தமது கட்சிக்கு இருக்கும்
சில இக்கட்டான சூழ்நிலைகள் இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலகுவில் அழிக்கக்கூடிய கட்சியல்ல என்றும், அரசியல் வரலாற்றில் மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கிய கட்சி அது என்றும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்குவதற்கு வழிவகுத்த பண்டாரநாயக்க கொள்கைகளுக்கு அமைவாக நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் தாய்நாட்டிற்கு சேவையாற்றுவதும் தமது கட்சியின் பொறுப்பாகும் என துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தினார். இந்த நாட்டு மக்களை தான் நம்புவதாகவும்
ஷம்ஸ் பாஹிம்
Post a Comment