Top News

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு



ஆளுங்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட சந்திப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (18) முற்பகல் 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post