திருமண மண்டபத்தில் மின் ஒழுக்கு காரணமாக தீ !

ADMIN
0





யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அல்லைம்பதி வடிவேலர் மண்டபத்தில் மின் ஒழுக்கு காரணமாக தீப் பரவல் ஏற்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது


குறித்த துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்திலிருந்து தீ பரவி புகை வெளியேறுவதை அதவானித்த அங்கிருந்தவர்கள் மற்றும், அருகிலுள்ள ஆலயத்திற்க்கு சென்றிருந்தவர்கள் துரிதமாக செயற்பட்டு அங்கிருந்த தீயணைப்பு இரசாயனத்தையும், மணல் மண்ணையும் பயன்படுத்தி தீயை அணைத்ததுடன் உடனடியாகவே மின்சார சபைக்கும் அறிவித்தனர்.


இதனால் துரிதமாக செயற்பட்ட மின்சார சபை மின் இணைப்பினையும் துண்டித்ததன் காரணமாக பல கோடி ரூபா பெறுமதியான திருமண மண்டபம் காப்பாற்றப்பட்டுள்ளது.


இச்சம்பவத்தால் குறித்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top