கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணியளவில் பரவிய பாரிய தீ பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் மார்பு நோய் சிகிச்சை நிலையம், பாலியல் நோய் சிகிச்சை நிலையம், பரிசோதனை அறை, களஞ்சிய அறை, வைத்தியர் சிகிச்சை அறை ஆகியன தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment