மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதி பகுதியில் நேற்று (13) வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்-பேசாலை பகுதியில் இருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு வந்த கூலர் ரக வாகனம் ஒன்று மேற்படி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மன்னார் பொது விளையாட்டு மைதான வீதி ஊடாக வைத்தியசாலை சந்தியை நோக்கி பயணித்த குறித்த வாகனம் வைத்திய சாலை சுற்றுவட்ட பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கடைகளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் வைத்தியசாலை பகுதியில் இயங்கி வந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் விற்பனை நிலையம் முற்றாக சேதமாகி உள்ளதுடன் அருகில் இருந்த சில கடைகளும் சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்தில் சாரதி மற்றும் நடத்துனர் பலத்த காயங்களுடன் இப்பகுதியில் ஒன்று கூடியவர்களினால் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment