துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் ‘Mevlut Cavusoglu’ மற்றும் அவருடன் 13 பேர் கொண்ட குழுவும் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.
இதன்படி ,துருக்கியில் இருந்து விசேட விமானம் மூலம் வருகை தந்த குழுவினர் இன்று காலை 6.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.
Post a Comment