Top News

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட எம்.பி சிறீதரன்!



கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் பார்வையிட்டார்.

இன்று மதியம் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.


தீ விபத்து ஏற்பட்டதும் தீயை அணைப்பதில் கரைச்சி பிரதேச சபை செயற்பட்ட விதம் தொடர்பில் வைத்தியசாலையினர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தினர்.


ஆளணி இல்லாத போதிலும் சிறப்பாக செயற்பட்டு தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பாராட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் வட்டார அமைப்பாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post