உள்நாட்டில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மதுபான போத்தல்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஓட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறித்த ஸ்டிக்கர் மதுபான போத்தல்கள் மற்றும் கொள்கலன்களில் ஒட்டப்படும் என்றும் மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகவே பழைய மதுபான போத்தல்களை விற்பனை செய்து நிறைவு செய்வதற்கு எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது.
அதன் பின்னர் விற்பனை செய்யப்படும் சகல மதுபான போத்தல்களிலும் புதிய முத்திரைகள் காணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Post a Comment