ஊடகப்பிரிவு-
தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, அம்பாறை மாவட்டத்துக்கு புகழ் ஈட்டித் தந்துள்ள நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்களுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
தேசிய மட்டத்திலான கபடி போட்டியில், அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் (10) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணியினர், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை நேற்று (11) கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இங்கு கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்,
“கிழக்கு மாகாணம், பல்வேறு துறைகளில் பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது. அந்தவகையில், நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணியினர் வரலாற்றுச் சாதனை படைத்து, நிந்தவூர் மண்ணுக்கும் அம்பாறை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களது ஆற்றல்களையும் விடாமுயற்சிகளையும் என்னால் உணர முடிகின்றது.
தேசிய மட்டத்தில் பெற்ற வெற்றியுடன் இந்த அணியினர் நின்றுவிடாது, சர்வேதச ரீதியிலான போட்டிகளிலும் பங்கேற்று, சாதனைகள் பல படைக்க வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன். இந்த அணியினர், எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையின் மூலம் இலங்கைக்கு புகழ் ஈட்டித் தருவார்கள் என நம்புகின்றேன்” என்று கூறினார்.
Post a Comment