கடந்த காலத்தில் செய்த தவறுகளை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு காணும் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட வேண்டும் – சரத் பொன்சேகா!

ADMIN
0




கடந்த காலத்தில் செய்த தவறுகளை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு காணும் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் அதே பழைய பாரம்பரிய அரசியல் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஈடுபட்டால் மக்களுக்கு நம்பிக்கை இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததுடன் டொலரின் பெறுமதி சுமார் 30 ரூபாயினால் அதிகரித்ததாக அவர் தெரிவித்தார்.


ஆகவே நாட்டின் வறுமையை நோக்கிய பயணத்திற்கு முன்னாள் அரசாங்கமும் பொறுப்பு என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.


எனவே எதிர்க்கட்சிகள் தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு பின்னடைவுகளை சரிசெய்து கொண்டு முன்னேற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.


இந்த விடயங்களை தீர்க்காமல் அரசாங்கத்தை அமைத்தால், ஐந்து வருடங்களில் அரசாங்கம் கவிழும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top