இலங்கை மின்சார சபைக்கு ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருள் இருப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் எரிபொருள் இருப்பு கிடைத்தால் மின்சார சபைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment