மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள
பிரச்சினை காரணமாக, நேற்றிரவும் நாட்டின் பல பாகங்களில், ஒரு மணிநேர மின் துண்டிப்பு அமுலாக்கப்பட்டது.
இதேநேரம், இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் வழங்கும் 3,000 மெற்றிக் டன் டீசலை தரையிறக்கும் நடவடிக்கை நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், தற்போதைய நிலைமைக்கு மத்தியில், இன்றைய தினமும் மின் துண்டிப்பை அமுலாக்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
Post a Comment