இலங்கையில் மின் வெட்டா? : இறுதித் தீர்மானம் இன்று!

ADMIN
0


திட்டமிடப்பட்ட மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


இன்று முதல் திட்டமிடப்பட்ட மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.


டொலர் பிரச்சினை காரணமாக, இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் (CPC) அனல் மின் நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளமை காரணமாகவும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பிரிவு மூடப்பட்டுள்ளமை, கெரவலப்பிட்டியிலுள்ள யுகதனவி தொகுதியின் பராமரிப்பு பணிகள், களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு போன்ற விடயங்கள் காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய கவலைகள் எழுந்துள்ளதாக மின்சார சபை கூறியுள்ளது.


இவ்வாறானதொரு பின்னணியில் திட்டமிடப்பட்ட மின் வெட்டுகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை அனுமதி கோரியிருந்தது.


இந்நிலையில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் நாளாந்தம் திட்டமிடப்பட்ட மின் வெட்டுகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.


எவ்வாறாயினும் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், இன்று முதல் மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top