இன்னுமொரு இனத்தின் நியாயமான,நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை-வியாழேந்திரன்!

ADMIN
0




எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான,நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை எனவும் அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் புனரமைப்புக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக இந்த நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.

இதன்கீழ் வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 59 குடும்பங்களுக்கு ஆடுகளை வழங்குவதற்கு 18இலட்சம் ரூபாவும், 12 குடும்பங்களுக்கான வீடுகள் திருத்துவதற்காக 26 இலட்சம் ரூபாவும், மூன்று விளையாட்டு மைதானங்களை புனரமைப்பதற்காக 15இலட்சம் ரூபாவும், 18குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக 12இலட்சத்து 60ஆயிரம் ரூபாவும், மிகவும் வறிய நிலையில் உள்ள 18 குடும்பங்கள் மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்வதற்காக 04 இலட்சத்து 16ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான நிதிகள் மற்றும் ஆடுகள் வழங்கும் நிகழ்வு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவற்றினை வழங்கிவைத்தார்.


இந்த நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சபேசன்,அமைச்சரின் பிரதேச இணைப்பாளர் நிரோஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top