Top News

இன்றும் அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்தங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டம்






புத்தளம் நகரில் தீப்பந்தங்கள் ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது.




புத்தளம் - கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும், மூவின மக்களும் கலந்துகொண்டனர்.




ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட புத்தளம் பிரதேச, புத்தளம் நகர சபை ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




நாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் , பால்மா , எரிவாயு என்பவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் என்பவற்றை கண்டித்தும் குறித்த தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




இதன்போது, போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.




அத்துடன், மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் இதன்போது கோரிக்கையையும் விடுத்தனர்.

Post a Comment

Previous Post Next Post