தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட 10 மருத்துவ சோதனைகளின் படி, அவருக்கு எந்த நோய் தாக்கங்களும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு சட்டவைத்திய அதிகாரி கொழும்பு மேல் நீதிமன்றுக்கு இதனை அறிவித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
ராஜகிரியவில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் உடல்நிலையை ஆராய்ந்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 11ஆம் திகதி உத்தரவிட்டது
அதன்படி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த சம்பிக்க ரணவக்கவிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட 10 சோதனைகளிலும் விசேட நோய் எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளதாக கொழும்பு பிரதான நீதி வைத்திய அதிகாரி நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
இதனை அடுத்து சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி வரை பிற்போடுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Post a Comment