தற்போது நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (19) காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறான நெருக்கடி காணப்பட்டபோதும் இலங்கை செலுத்த வேண்டிய 500 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் நேற்று செலுத்தப்பட்டது என தெரிவித்தார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயத்தின் மூலம் நாட்டிற்கு பாரிய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்ததாகவும் அமைச்சர் டலஸ் தெரிவித்தார்.
Post a Comment