தென்கொரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Park Geun-hye நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பின் பேரில் அவரும் 18 பேரும் நேற்றிரவு(புதன்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இவர்களை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர்.
தென்கொரிய சபாநாயகர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளதுடன், நாடாளுமன்றத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அவரது விஜயத்தின் போது, தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி இருதரப்பு உறவுகளை புதிய திசையில் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment