Top News

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்!




 

கொழும்பின் சில பகுதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதன்படி கொழும்பு – கண்டி வீதியின் புதிய களனி பாலத்தின் கொழும்பிற்கு பிரவேசிக்கும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்துடன் , ஹைலெவல் வீதியின் நுகேகொடை, கொஹூவலை, நாவல, ராஜகிரிய,கொள்ளுப்பிட்டி மற்றும் பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.


மேலும் ,பாடசாலைகளின் சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் வழமைப்போல் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post