Top News

உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு – பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன

வகுப்பறை இறுதி நாட்களில் எந்த பிரியாவிடை நிகழ்வுகளையும் நடாத்த வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன அனைத்து உயர்தர வகுப்பு மாணவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது வேகமாக கொவிட் 19 தொற்று பரவுவதை கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அவ்வாறான பிரியாவிடை நிகழ்வுகளில் ஒன்று சேர்வதன் மூலம் கொவிட் தொற்று பரவலுக்கான அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அவ்வாறு அதனால் கொவிட் தொற்று பரவல் ஏற்படின் மாணவர்களால் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதை கருத்திற் கொண்டு இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளை மாணவர்களிடம் கையளித்த பின்னர், எந்த காரணத்துக்காகவும் மாணவர்களை பாடசாலையில் தரித்திருக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும் வேண்டுகோள் முன் வைத்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post