Top News

கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் – எதிர்க்கட்சி!




கொரோனா தொற்று எனக் கூறி தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலத்தை நீடித்து நேற்று அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.


இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன இந்த வேண்டுகோளை விடுத்தார்.


69 இலட்சம் மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்ததாக தெரிவிக்கும் அரசாங்கம் தேர்தலை நடத்த அஞ்சத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.


மேலும் மக்கள் யாருக்கு ஆதரவை வழங்குகின்றார்கள் என்பதை அறிந்துகொள்ளவாவது தேர்தலை நடத்துங்கள் என துஷார இந்துனில் அமரசேன சவால் விடுத்தார்.

Post a Comment

Previous Post Next Post