Top News

மீண்டும் இருளில் மூழ்கவுள்ள இலங்கை



அனல் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இரவு வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டொக்டர் சுசந்த பெரேரா தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் செவ்வாய்க்கிழமை (25) முதல் தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 183 மெகாவோட் மின் இழப்பு ஏற்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படும் முறை மற்றும் நேரம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனவும், திங்கட்கிழமை வரை மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி சுசந்த பெரேரா இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post