மாணவிகளுக்கு அந்தரங்கப்பகுதியை காட்டிய இலங்கை பொலிஸின் மோசமான செயல்!

ADMIN
0




இலங்கையில் பாணந்துறை பகுதியில் பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் காரில் இருந்தவாறு, பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவிகள் தமது அதிபர் மூலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கெமராக்களை ஆய்வு செய்த நிலையில், சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top