தேவாலய கைக்குண்டு: பிரதான சந்தேகநபர் சிக்கினார்

ADMIN
0


பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் வெடிகுண்டு போன்ற வடிவிலான கைக்குண்டை வைத்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு வைக்க அவருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணத்தை வழங்கிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்

கடந்த 11ஆம் திகதி குறித்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top