Top News

புதிய அரசியலமைப்பு அடுத்த மாதம்?

புதிய அரசியலமைப்புக்கான வரைபு அடுத்த மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான குழு, அதன் பணிகளை இன்னும் சில தினங்களில் நிறைவு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியிடம் இந்த வரைபு கையளிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி அதனை ஆராய்வார் எனவும் அதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post