செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடிகுண்டுகளை இரும்புக்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
ஜனவரி 4ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்ட காணியில், வேலி அமைப்பதற்காக, அன்றையதினமே சென்றிருந்த நபர், பாரிய குண்டுகளைக் கண்டுள்ளார். அதுதொடர்பில் தன்னுடைய சகாக்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அவ்விரு பாரிய குண்டுகளையும் இரும்புக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போதே கைவேலி பகுதியைச் சேர்ந்த, அறுவர் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோக்கிராம் நிறை கொண்டது.
கைது செய்யப்பட்ட அறுவரையும் மாங்குளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment