Headlines
Loading...
   மல்வத்து – அஸ்கிரிய பீடங்களின் மஹாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி!

மல்வத்து – அஸ்கிரிய பீடங்களின் மஹாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி!





ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மல்வத்து – அஸ்கிரிய பீடங்களின் மஹாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

மல்வத்து மஹா விஹாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து, புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.


தொல்லியல் மதிப்புள்ள வரலாற்றுத் தலங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில், ஜனாதிபதி மஹாநாயக்க தேரருக்குத் தெளிவுபடுத்தினார்.


இதனையடுத்து, மஹாநாயக்க தேரரினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்று கையளிக்கப்பட்டது.


மல்வத்து விஹாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய விஹாரைக் கட்டிடத்துக்கான நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அதனையடுத்து, அஸ்கிரிய மஹா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி , அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கத் தேரர் அதி வணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.


அஸ்கிரிய கெடிங்கே ரஜமஹா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர், அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வேடருவே ஸ்ரீ உபாலி நாயக்கத் தேரரைச் சந்தித்தார்.


விஹாரை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பிலும், ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார்.


தொடர்ந்து அஸ்கிரிய உடுகம விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதிக்கு பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கிய அனுநாயக்கத் தேரர் அதி வணக்கத்துக்குரிய ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், நாட்டின் எதிர்காலத்துக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.


அஸ்கிரிய பீடத்தின் பிரதம பதிவாளர் வணக்கத்துக்குரிய மெதகம தம்மானந்த தேரரையும் சந்தித்த ஜனாதிபதி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.


அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் ஜய பிரித் பாராயணம் செய்து, ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.


0 Comments: