இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, சமையல் எரிவாயு ஏற்றிச்சென்ற லொறியை பின்னால் துரத்திச் சென்றுள்ளார்.
அவருடைய வீட்டில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு நிறைவடைந்து விட்டது. எரிவாயு தேடிக்கொண்டு வீதியில் அலைந்து திரிந்துள்ளார்.
இந்நிலையில், பெலவத்தையிலுள்ள முகவரிடம் காஸ் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்குச் சென்றபோது காஸ் நிறைவடைந்தவிட்டது. அதன்பின்னர், அத்துருகிரியவில் காஸ் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கும் சென்றுள்ளார். ஆனால் காஸ் இல்லை.
அத்துருகியவில் நிற்கும் போது காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு நீளமான லொறியொன்று சென்றுள்ளது. அந்த லொறியை துரத்திக்கொண்டு பின்னாலே சென்ற டயனா கமகே எம்.பி, ஒருவல பிரதேசத்துக்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள காஸ் முகவர் நிலையத்தில் சிலிண்டர்கள் இறக்கப்பட்டதன் பின்னர், சிலிண்டொன்றை வாங்கிக்கொண்டு வீடுத் திரும்பியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment