Top News

சிறுமியின் உயிரைக் காவு கொண்ட சிறிய பரல்



வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி மாரியம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள வீட்டுத்திட்டத்தில் சிறியரக பிளாஸ்ற்றிக் பரல் ஒன்றினுள் தவறி வீழ்ந்த 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் களுவாஞ்சிகுடிதெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமி, வெள்ளிக்கிழமை(21) பிற்பகல் வீட்டிலிருந்த வேளை தண்ணீர் பைப் இருக்கும் இடத்துக்குச் சென்று அங்கு இருந்த நீர்நிரம்பிய சிறியரக பிளாஸ்ற்றிக் பரலில் கையிலிருந்த ஜம்பு பழத்தை போட்டுள்ளார்.

பழத்தை மீண்டும் எடுப்பதற்கு முயற்சித்த வேளை சிறுமி, அந்த சிறிய ரக பரலினுள் தலைகீழாf தவறி வீழ்ந்துள்ளார்.

23 அங்குலம் உயரம் கொண்ட அந்த சிறியரக வரலில் 8 அங்குலம் அளவில் அதனுள் தண்ணீர் இருந்துள்ளது.

தந்தை உறவினர் வீடொன்றிற்கு வெளியில் சென்றிருந்த இந்நிலையில் தங்கை வீழ்ந்துள்ளதை அவதானித்த சிறுமியின் 5 வயதுடைய அண்ணா வீட்டிற்குள் சமைத்துக் கொண்டிருந்த தாயிடம் கூறியுள்ளார்.

உடன் விரைந்து மகளை மீட்டதாய் அயலவர்களின் உதவியுடன், உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலைக்குக் கொண்டு சென்ற போதும் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் பிரேதத்தை, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணியின் உத்தரவுக்கமைய சடலத்தை சனிக்கிழமை (22) திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பார்வையிட்டார்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்படி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஸ்த்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







You

Post a Comment

Previous Post Next Post