எதிர்காலத்தில் நாட்டில் பாண் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பேக்கரி பொருட்களுக்கு தேவையான அளவு கோதுமைமா பற்றாக்குறையே இந்நிலைமைக்கு காரணம் என அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் தமது சங்கம் கோதுமைமா நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாகவும், கோதுமைமா கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் கோதுமைமாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை இருப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் பொதுமக்கள் பாணுக்காகவும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment