கிண்ணியா படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சஜித் நிதி உதவி!

ADMIN
0





கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பிற்பகல் குறிஞ்சாக்கேணிக்கு விஜயம் மேற்கொண்டார்.


குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து இடம்பெற்ற இடத்தையும் அவர் சென்று பார்வையிட்டுள்ளார்.


பின்னர் படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.


அண்மையில் கிண்ணியா குறிஞ்சாக்கேணியின் இடம்பெற்ற படகுப்பாதை விபத்தில் எட்டு பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர்.


திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நிதி உதவி வழங்கிவைக்கும் நிகழ்வை, ஏற்பாடு செய்திருந்ததுடன், குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்ற படகு பாதை பகுதியினையும் சஜித் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top