Top News

இலங்கையில் மற்றுமொரு துறைமுக, நகரதத்தை உருவாக்க திட்டம்


காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் புதிய நீர் பிரிப்பு தடாகத்துடன் கூடிய நிலப்பரப்பு ஒன்றை நிர்மாணிக்க உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.



நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்தத் திட்டத்தின் மூலம் காலி துறைமுகத்திற்கு புதிதாக 40 ஹெக்டேயர் அதாவது 100 ஏக்கர் நிலப்பரப்பு கிடைக்கவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு விளக்க சிறிலங்கா துறைமுக அபிவிருத்தி அதிகார சபை நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது.

கொழும்பு துறைமுக நகரம் போன்று காலி பிரதேசத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த ஹொட்டல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

தேசிய முதலீட்டாளர்கள் மூலம் புதிய அபிவிருத்தியை பிரதேசத்தில் ஏற்படுத்த உள்ளதாகவும் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post