சஜித் வன்னி பள்ளிவாசல்களுக்கு விஜயம் – ரிஷாட், புத்திக்க பத்திரன ஆகியோரும் உடனிருந்தனர்!

ADMIN
0



ஊடகப்பிரிவு-

கடந்த வாரம் 7, 8ஆம் திகதிகளில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வவுனியா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் மன்னார், தாராபுரம் ஹுசைனியா ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு சென்று, அங்கு நடைபெற்ற விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வுகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உளிட்ட முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.









Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top