தடையின்றி மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி குறித்த பணிப்புரையை விடுத்ததாக அதில் கலந்துகொண்டிருந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் காமினி லொக்குகே ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மின்சாரத்தைத் துண்டிக்காது முடியுமான அளவு மின்சாரத்தை விநியோகிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment