குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பாய்ந்து, பெண்ணொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
அதன்படி ,நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக வருகைத் தந்த பெண்ணொருவரே, இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
60 மில்லியன் ரூபா நிதி மோசடி ஒன்று தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இந்த பெண், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய சம்பவத்தில் 46 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் ,இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment