பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, பெப்ரவரி முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை 31,343 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, பெப்ரவரி மாதத்திற்கான வருகை விகிதம் நாளாந்தம் 3,134 ஆகக் காணப்படுவதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவில் இருந்தே 4,566 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், 3,799 பயணிகளின் வருகையுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் 3,575 பயணிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது
Post a Comment