மாதம் 10 கோடி ரூபா கிடைத்தாலும் தனக்கு போதாது என அதுரலியே ரத்தன தேரர் கூறி உள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனை கூறி உள்ளார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குறிய சம்பளத்தை மாதாந்தம் நான் வாங்கினாலும் நாட்டுக்காக ஒரு சமூக இயக்கத்தை உருவாக்கி வருகிறேன். என்னிடம் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா இருந்தாலும் அது போதாது.
குறிப்பாக நமது பௌத்த அடித்தளத்திற்கு ஒரு பரந்த மற்றும் ஆழமான இயக்கம் தேவை. மார்க்சியத்திற்கு ஜே.வி.பி உள்ளது.ஒரு ஆழமான இயக்கத்தை உருவாக்குவதே எனது பங்கு. என்னிடம் பணம் ஏதும் இல்லை. என்னிடம் செல்வம் இல்லை. வங்கி கணக்கு இல்லை. நான் பெற்ற ஒவ்வொரு பைசாவும் மக்களுக்காக செலவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார்.
Post a Comment