Top News

சம்பா அரிசியை 125 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை




எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 125 ரூபாவுக்கு நுகர்வோருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.




காலி- உனவட்டுன பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.




அனைத்து சதொச விற்பனையகங்களிலும் குறித்த விலைக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.




குறித்த விலையில் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தாம் முழு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்வதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post