Top News

மேலும் 16 தமிழக மீனவர்கள் கைது.



எம். றொசாந்த்

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டதுடன், இவர்களது , மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் நீரியல்வள திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post