பெண் ஒருவரின் வங்கி கணக்குக்கு வந்த 35 லட்சம் பணம் தாயும் மகனும் செய்த நெகிழ்ச்சியான செயல் - குவிகிறது பாராட்டு
February 25, 2022
0
இலங்கையில் பெண் ஒருவரின் நேர்மையான செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக 35 லட்சம் ரூபாய் பணம் வைப்பில் இடப்பட்டுள்ளது. எனினும் அதனை உரிய தரப்பிடம் குறித்த பெண் கையளித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாத்தறை வங்கி கிளையில் இருந்து பெண் ஒருவரின் வங்கி கணக்கில் 35 லட்சத்து 91ஆயிரம் ரூபாயம் பணம் தவறாக வைப்பிடப்பட்டுள்ளது.
பணம் வந்தவுடன் குறுந்தகவல் ஒன்று அந்த பெண்ணுக்கு கிடைத்துள்ளது. மாலை நேரத்தில் அந்த குறுந்தகவல் கிடைத்துள்ளது.
அடுத்த நாள் காலை தனது மகனுடன் உரிய வங்கிக்கு சென்று அந்த பணத்தை மீள எடுத்து தவறாக வைப்பிட்ட நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பான தகவலை ஆதாரத்துடன் மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பணம் எங்களுக்கு தேவையில்லை. மற்றவர்களின் பணத்தில் மகிழ்ச்சியாக வாழ நினைப்பது மிகப்பெரிய தவறாகும். இந்த பணத்தால் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மக்களுக்கும் சிக்கல் ஏற்படும். இதனால பணத்தை திருப்பி கொடுத்துவிட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாட்டுக்கு தாய் மற்றும் மகனுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
Share to other apps